“நீ என்ன பெரிய மம்மா கொடுக்கோ.? மண்டைய்ல என்ன கொம்பா மொளைச்சிருக்கு?” என்று மதுரை ஏரியாவில் சொல்லுவது வழக்கம்.
வம்புச்சண்டைக்கு வர்றவனைப் பார்த்து சண்டியர்கள் முதலில் இப்படித்தான் சத்தாய்ப்பார்கள்.
ஆனா நிஜமாகவே ஒரு ஏழை விவசாயிக்கு கொம்பு முளைச்சிருக்குங்க.! படத்தைப் பாருங்க தெரியும்!
பாட்னா பக்கமாக உள்ள புஜார்க் கிராமத்தை சேர்ந்தவர் சியாமல் யாதவ். வயசு 74.
இவருக்கு ஐந்து வருடங்களுக்கு முன்னாள் தலையில் அடிப்பட்டிருக்கிறது.அதற்கு பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக வளர ஆரம்பிச்சிருக்கு, இந்த கொம்புக்கு வெயில்தான் எனர்ஜி. சீக்கிரமாகவே வளர்ந்து விடுமாம். இதற்குப் பெயர் “செபாஷியல் ஹார்ன் கண்டிசன்“என்கிறார்கள் டாக்டர்கள். வெயில் படுகிற இடங்களில் இது முளைக்கக்கூடியது .அதிசயமாக வரக்கூடிய வியாதி.
தற்போது டாக்டர்கள் ஆபரேஷன் பண்ணி கொம்பினை எடுத்து விட்டார்கள்.