கவர்ச்சி நடிகைக்கு கணவராகும் தகுதி உங்களுக்கு இருக்கா?

தெலுங்கில் கவர்ச்சிக் கொடியை உயர்த்திப் பிடித்திருக்கிற நடிகை அடா சர்மா.

தற்போது கல்யாண ஆசை வந்து விட்டதோ என்னவோ, தனது டிவிட்டர் பக்கத்தில்  மாப்பிள்ளைப் பார்க்கத் தொடங்கி இருக்கிறார். கண்டிஷன் ஒன்றும் பெரிதாக இல்லை.கைக்கு அடங்கிய கைப்பிள்ளையாக இருந்தால் போதும் .

இனி நிபந்தனைகளைப் பார்க்கலாமா?

  • வெங்காயம் சாப்பிடக்கூடாது.
  • சாதி,நிறம்,ஷூ சைஸ்,நீச்சல் அனுபவம்,புஜபலம் இதெல்லாம் பத்தி கவலை இல்லை.
  • தினமும் ஷேவ் பண்ணி முகம் பளபளப்பாக இருக்க வேண்டும்.
  • தினமும் 3 நேரமும் சமைக்கணும்.எப்பவுமே சிரிச்ச முகமாகவே இருக்கணும். (அடிச்சாலும் அழக்கூடாதா அடா ஷர்மா?)
  • இந்தியன் டிரஸ் கோட் தான்!
  • தினமும் 5 லிட்டர் தண்ணீர் குடிக்கணும்.
  • மது,மாமிசம் கூடாது.
  • எல்லா மொழிப் படங்களையும் பார்க்கணும் .என்னிடம் டிஸ்கஷன் பண்ணனும்.

இதாங்க நிபந்தனைகள் .ஆனா வயசுப்பத்தி எதுவும் சொல்லல.

அடா ஷர்மாகணவன் தேடல்