டிஜிட்டல் மோசடி குற்றங்களுக்கு பெரும்பாலும் இரையாகுபவர்கள் படித்தவர்களும், பெண்களும் தான். இதில் வெவ்வேறு வித ஊடகங்கள், சமூக வலைதளங்கள் மூலமாக இளம்பெண்கள் அதிகம் கண்காணிக்கப்படுகின்றனர்.
இப்படியான டிஜிட்டல் ஸ்மார்ட் சமூகத்தில் பெண்கள் சிக்கி எப்பேற்பட்ட வகையில் துன்பங்களை அனுபவிக்கிறார்கள் என்ற மைய கருத்தை முன்வைத்து விரைவில் வெளியாகவுள்ள படம் ‘கருத்துகளை பதிவு செய்’.
‘கருத்துகளை பதிவு செய்’. படத்தினை ‘ஜித்தன் 2’, ‘ 1 am’ படங்களை இயக்கிய ராகுல் பரமகம்சா இயக்கியுள்ளார். பழம்பெரும் நடிகரான SSR. ராஜேந்திரன் அவர்களின் பேரன் SSR. ஆர்யன் இதில் கதாநாயகனாக நடித்திருக்க, முக்கிய வேடத்தில் நடிகை உபாசனா நடித்துள்ளார்..
விநியோகஸ்தர் JSK கோபி இணைந்து தயாரித்துள்ள இந்தப்படத்திற்கு இசையமைத்திருப்பவர் இசையமைப்பாளர் கணேஷ்ராகவேந்திரா. பின்னணி இசை பரணி
‘கருத்துகளை பதிவு செய்’. படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை, பாராளுமன்ற உறுப்பினர் தொல்.திருமாவளவன் லுக்கை வெளியிட்டார். படத்தின் டிரெய்லரை பார்த்த அவர் படக்குழுவையும், இயக்குநர் ராகுலையும் வெகுவாக பாராட்டி, இம்மாதிரியான படங்கள் தற்போதுள்ள சமூக சூழ்நிலையில் தேவை என்றார்.
கடந்த வாரம் இத்திரைப்படம் சென்சார் போர்டுக்கு அனுப்பப்பட்ட போது .படத்தை பார்த்த சென்சார் போர்டின் தலைமை அதிகாரி திருமதி.லீலா மீனாட்சி படத்தின் இயக்குநரை பாராட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது.