விக்ரமை ஓரம் கட்டிய அஜித்!

அஜித் நடிப்பில் கவுதம்  மேனன் இயக்கத்தில்உருவாகியுள்ள   படம் ‘என்னை அறிந்தால் ‘. இப்படத்தை  பொங்கலன்று  வெளியாகும் என எதிர்பார்க்கப்படும்    இயக்குனர் ஷங்கரின்’ ஐ ‘யுடன் மோத  விட முடிவு செய்துள்ளனராம்.  .’ஐ’ படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் ஒரே நேரத்தில் வெளியிட திட்டமிட்டிருந்தனர். ஆனால், தெலுங்கில் சங்கராந்தி அன்று ஏற்கெனவே நிறைய படங்கள் வெளியாக இருக்கிறது. அதேபோல் இ ந்தியிலும் பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாக இருக்கிறது.எனவே இந்நேரத்தில் படத்தை வெளியிட்டால், படத்திற்கு அதிக வரவேற்பு கிடைக்காது என்பதாலும், அதிக எண்ணிக்கையில்  தியேட்டர்கள் கிடைக்காது என்பதற்காகவும் பொங்கல் ரேஸில் இருந்து ‘ஐ’ விலகுவதாக  கோடம்பாக்கத்தில்  செய்திகள் வெளியாகியுள்ளது.

Comments (0)
Add Comment