தமிழக சட்டப் பேரவையின் 8- வது கூட்டத் தொடர், வரும் ஜனவரி 6-ம் தேதி ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையுடன் தொடங்குகிறது.
இதுகுறித்து தமிழக சட்டப்பேர வைச் செயலாளர் கே.சீனிவாசன் வெளியிட்ட அறிவிப்பில்,‘தமிழக சட்டப்பேரவையின் கூட்டத்தை 2020-ம் ஆண்டு ஜனவரி 6-ம் தேதி காலை 10 மணிக்கு தலைமைச் செய லகத்தில் உள்ள சட்டப் பேரவை அரங்கில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கூட்டியிருக்கிறார். அன்று அவையில் ஆளுநர் உரை நிகழ்த்த உள்ளார்’ என்று தெரிவித்துள்ளார்.
2020-ம் ஆண்டுக்கான தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் ஜன.6-ம் தேதி கூடும் நிலையில், சொத்து உரிமையாளர் மற்றும் வாடகைதாரர் உரிமைகள் சட்ட திருத்தம் உள்ளிட்ட 6 சட்ட திருத்தங்களுக்காக கொண்டு வரப்பட்ட அவசரச் சட்டங்கள் பேரவையில் நிறைவேற்றப்படும் எனத் தெரிகிறது.
ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான முடிவுகளுக்கு பிறகு தமிழக சட்டப்பேரவை கூடுவதால் அந்த முடிவுகள் மற்றும் பல்வேறு விவகாரங்கள் குறித்து சட்டப்பேரவையில் காரசார விவாதங்கள் நடைபெறும்.
இக் கூட்டத்தொடரில், சட்டப்பேரவை கூட்டத்தொடரில், குடியுரிமை திருத்த சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப, எதிர்க்கட்சிகள் தயாராகி வருவதால், பேரவையில் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
6-ம் தேதி தொடங்கும் இக்கூட்டத்தொடர் 10-ம் தேதி வரை நடைபெற வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.