சிவகார்த்திகேயனின் படத்தலைப்பு வெளியானது!

சிவகார்த்திகேயன் நடிப்பில் இன்று நேற்று நாளை பட இயக்குனர் ரவிக்குமார் இயக்கி வரும் புதிய படத்தின் தலைப்பு இன்று மாலை 5 மணிக்கு வெளியானது.

இப்படத்திற்கு ’அயலான்’ என தலைப்பிடப்பட்டுள்ளது.இந்த படம் வேற்று கிரகவாசிகள்  (ஏலியன்)குறித்த படமாக இருக்கலாம் என்கிறார்கள்.24ஏம் ஸ்டுடியோஸ் மற்றும் கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ ஆர் ரகு மான் இசையமைக்கிறார்.

தமிழில் இதுவரை யாரும் படமாக்காத வித்தியாசமான சைன்ஸ் பிக்சன் கதையாக இயக்குனர் ரவிகுமார் இயக்கி வருவதாக கேஜேஆர் ஸ்டூடியோஸ் தனது சமூக வலைதளபக்கத்தில் அறிவித்துள்ளது.விரைவில் மற்ற விபரங்கள் வெளியாகும் என தெரிகிறது.