இந்நிலையில், 5-ம் மற்றும் 8-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு ரத்து குறித்து, நடிகர் சூர்யா தனது டுவிட்டரில் கூறியுள்ளதாவது,
“படிக்கும் வயதில் இடைநின்ற மாணவர்களை மீண்டும் கல்வியோட்டத்தில் இணைப்பது எத்தனை கடினமானது என்று அகரம் தன் களப்பணிகளில் உணர்ந்திருக்கிறது. மாணவர்களின் கற்றல் திறனை அளவிடுவதற்கு பொதுத்தேர்வு என்றும் தீர்வாகாது. 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. கல்வி அமைச்சருக்கும், தமிழக அரசுக்கும் நன்றிகள்”.இவ்வாறு சூர்யா குறிப்பிட்டுள்ளார்.
#PublicExam pic.twitter.com/rwWCoMcZA0
— Suriya Sivakumar (@Suriya_offl) February 4, 2020