5,8-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து: தமிழக அரசுக்கு நன்றி கூறிய சூர்யா!!

 

 

தமிழகத்தில் 5-ம் வகுப்பு மற்றும் 8-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது. இந்த அறிவிப்புக்கு பல்வேறு அரசியல் கட்சியினரும், கல்வியாளர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர்.இந்த நிலையில் இன்று  5-ம்  மற்றும் 8-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது.

இந்நிலையில், 5-ம்  மற்றும் 8-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு ரத்து குறித்து, நடிகர் சூர்யா தனது டுவிட்டரில் கூறியுள்ளதாவது,
“படிக்கும் வயதில் இடைநின்ற மாணவர்களை மீண்டும் கல்வியோட்டத்தில் இணைப்பது எத்தனை கடினமானது என்று அகரம் தன் களப்பணிகளில் உணர்ந்திருக்கிறது. மாணவர்களின் கற்றல் திறனை அளவிடுவதற்கு பொதுத்தேர்வு என்றும் தீர்வாகாது. 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. கல்வி அமைச்சருக்கும், தமிழக அரசுக்கும் நன்றிகள்”.இவ்வாறு  சூர்யா குறிப்பிட்டுள்ளார்.