பிரபல இயக்குநரின் திடீர் நடிகர் அவதாரம்.

,பிரபல படத்தயாரிப்பாளர் லலிதா தனஞ்செயன் தயாரித்து வருகிற படம்தான் “கபடதாரி” இந்த படத்தில் தற்போது “சத்யா” பட இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி நடிகராக இணைந்திருக்கிறார் என்கிற செய்தியை வெளியிட்டிருக்கிறார்கள்.

கிரியேட்டிவ் என்டெர்டெய்னர் ,மற்றும் விநியோகஸ்தர் சார்பில் ஜி தனஞ்செயன் ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

“கபடதாரி” எங்கள் அனைவரின்  மனதிற்கும் மிக நெருக்கமான படைப்பு. படத்தின் மீது பெரும் ஈர்ப்பு உண்டாகிவிட்டது.  படத்தில் நடித்து வரும் அனைவருமே தங்கள் முழுத்திறமையையும் கொட்டி தங்கள் கதாப்பாத்திரங்களுக்கு உயிரூட்டியுள்ளார்கள்.

இக்கதையில் ஒரு குறிப்பிட்ட கதாப்பாத்திரத்திற்கு நல்ல உடல்கட்டுடன், ஸ்டைலீஷ் லுக்கில் இருக்கக்கூடிய நடிகர் தேவைப்பட்டார். படக்குழுவுடன் இணைந்து  பலரை மனதில் கொண்டு,  யாரை நடிக்க வைக்கலாம் என விவாதித்தோம். இறுதியாக இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இந்த கதாப்பாத்திரத்தை அருமையாக கையாள்வார் என எனக்கு தோன்றியது.

ஆனால் அவர் அரிதாரம் பூச சம்மதிக்கவில்லை. பெரும் வற்புறுத்தலுக்கு பின் எங்கள் மீதான அன்பில் அவர் ஒத்துக்கொண்டார். அவருடைய கதாப்பாத்திரம் கதையை அடுத்த தளத்திற்கு கொண்டு செல்லும் மிக முக்கிய பாத்திரம் ஆகும். படத்தில் மிக அழுத்தமான பாதிப்புகளை ஏற்படுத்துவதாக  அந்த கதாப்பாத்திரம் இருக்கும். இப்படத்திற்கு பிறகு இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி தமிழ் சினிமாவில் மிக முக்கிய நடிகராக வருவார் என எனக்கு பெரும் நம்பிக்கை இருக்கிறது” என்றார்.

. சிபிராஜ் , நந்திதா ஸ்வேதா நாயகியாக நடிக்கிறார். நாசர், ஜெயப்பிரகாஷ், சதீஷ் குமார் முக்கிய பாத்திரங்களில் நடிக்கிறார்கள். சைமன்  கிங் இசையமைக்கிறார்.  ராசமதி ஒளிப்பதிவு செய்ய, எம்..ஹேமந்த் ராவ் கதையில் தழுவல் திரைக்கதை, வசனத்தை ஜான் மகேந்திரன் மற்றும் தனஞ்செயன் எழுதியுள்ளனர்.

கபடதாரிஜான் மகேந்திரன்ஜி.தனஞ்செயன்பிரதீப் கிருஷ்ணமூர்த்தி