பாலிவுட் பிரபல பாடகிக்கு கொரானா…! விமான நிலையத்தில் டிமிக்கி கொடுத்து தப்பியவர்.!

பாலிவுட்டின் மிகப்பெரிய பாடகி கனிகா கபூர்.

கடந்த இரு வாரத்துக்கு முன்னதாக லண்டனில் இருந்து திரும்பியவர் எப்படியோ விமான நிலைய சோதனைகளை சமாளித்து விட்டு வீட்டுக்குப் போய் விட்டார்.

ஆனாலும் உடம்பு கேட்கணுமே…! நாலைந்து பேருடன் சோதனைக்கு சென்றதில் இவருக்கு மட்டும் தொற்று இருப்பது தெரிய வந்தது.

இன்று லக்னோவில் இருக்கும் கிங் ஜார்ஜ் பல்கலைக் கழக மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டார்.

விமான நிலையத்திலேயே மடக்கப்பட வேண்டியவர் .புத்திசாலித்தனம் என்று ஏர்போர்ட் அத்தாரிட்டிகளை ஏமாற்றி விட்டு செல்பவர்களால்தான் ஆட்கொல்லி  நோய் பரவுகிறது.

கனிகா கபூர்கொரானா