சம்பளம் அதிகமா தருவேன்.ஆனா என்னை அட்ஜஸ்ட் பண்ணிக்கணும்.

நெடிய இடைவெளிக்குப் பிறகு இப்படியொரு குற்றச்சாட்டு “பேமண்ட் விஷயத்தில தாராளமா இருக்கலாம்.ஆனா சில காம்பரமைஸ்கள் பண்ணனும் ,ரெடியா?”என்று ஒரு தயாரிப்பாளர் தனது வேட்கைக்கு ஒரு நடிகையிடம் விலை பேசியிருக்கிறார். அந்த பாலிவுட் நடிகையின் பெயர் மான்வி காக்ரு .வெப் சீரியல்களில் பேமஸ் நடிகை.

“என்னம்மா நடந்தது?”

“ஒரு வருஷம் இருக்கும். பழக்கமில்லாத எண்ணிலிருந்து ஒரு கால் வந்தது. ‘நாங்க ஒரு வெப் சீரியல் பண்றோம். அதில உங்களுக்கும் ஒரு கேரக்டர் இருக்கு.இதான் எங்கள் பட்ஜெட் னு ;பேச ஆரம்பித்தார்.

பட்ஜெட் பற்றி இப்ப எதுக்கு என்னிடம் பேசறீங்க.கதையை சொல்லுங்க.எனக்கு கேரக்டர் பிடிச்சிருந்தால் நடிக்கிறதா இல்லையா என்பதை முடிவு செய்வேன்னு சொன்னேன்.பிறகு  சம்பளத்தை பத்தி பேசலாம்னு சொன்னேன்.

ஒரு தொகையை சொன்னார்.

எனக்கு கட்டாதுன்னு சொன்னேன்.

அடுத்த நொடியே அவர் சொன்னதொகையில் இருந்து மூணு மடங்கு அதிகமாக தருவதாக சொல்லிவிட்டு இவ்வளவு பணம் வேணும்னா நீங்க சில ‘காம்பரமைஸ்கள் ‘பண்ணனும்னார் .

இந்த காம்பரமைஸ் என்கிற வார்த்தைக்கு கெட்ட அர்த்தம் இருக்கு சினிமா உலகத்தில்.

கோபம் வந்திருச்சு.கண்டபடி திட்ட ஆரம்பிச்சேன். எவ்வளவு தெனாவட்டு இருந்தா என் கிட்ட இப்படி பேசுவே.போலீசில் புகார் பண்ணுவேன்.ஓடிப் போயிடுன்னு போனை கட் பண்ணினேன் “என்கிறார் மான்வி .

 

மான்வி காக்ருவெப்சீரியல் மீடூ