இதன்காரணமாக ஏற்கனவே நிச்சயிக்கப்பட்ட திருமணங்களை பலர் ரத்து செய்தும்,சிலர் தங்களின் வீடுகளிலும் நடத்திக் கொள்கின்றனர்.இந்நிலையில் வாட்ஸப் மூலம் கேரளாவில் உள்ள வங்கி அதிகாரிஸ்ரீஜித் நடேசன் (வயது 30),லக்னோவில் உள்ள பெண் என்ஜினீயர் அஞ்சனா ஆசாரியை வாட்ஸப் மூலமாக திருமணம் செய்து கொண்டுள்ளார்.
திருமணத்தை எப்படி நடத்துவது என ஸ்ரீஜித்தும்,அஞ்சனாவும் பதறித் துடித்தனர்.இதையடுத்து,நிச்சயிக்கப்பட்டஅதே நாளில் திருமணத்தை எப்படியும் நடத்துவது என இருவீட்டாரும் தீர்மானித்து பல வகைகளில் யோசித்தவர்களுக்கு வீடியோ கால் மூலம் வாட்ஸ்அப்பில் நடத்த திட்டமிட்டனர் . இதற்கு ஸ்ரீஜித்,அஞ்சனா இருவரும் ஒப்புக்கொண்டனர்.அதன் படி, கடந்த 26 ந்தேதி லக்னோவில் அஞ்சனா மணப்பெண் கோலத்திலும், கேரளாவில் ஸ்ரீஜித் மணமகன் கோலத்திலும் அமர்ந்தனர்.முகூர்த்த நேரம் வரவும்,
மணமகன் ஸ்ரீஜித், வீடியோகாலில் அஞ்சனா காட்சியளித்த செல்போனுக்கு தாலியை கட்ட, மணமகள் அஞ்சனா அவர் கையில் இருந்த தாலியை தன் கழுத்தில் கட்டிக்கொண்டார். வித்தியாசமாக நடந்த இந்த திருமணத்தில்,மணமக்களுக்கு அருகில் இருந்த இருவீட்டாரும் அட்சதை தூவி ஆசி வழங்கினர்.இந்த சுவாரசியமான,வித்தியாசமான திருமண வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
https://www.facebook.com/karuppusamy.boopathi/videos/1357919371082971/?t=25