ஒன்னரை லிட்டர் கள்ளு பார்சேல்..!அண்ணனுக்கு நோ சைடு டிஷ் !

கேரளத்தில் கள்ளுதான் சிறப்பு. அவர்கள் தென்னங்கள் பிரியர்கள்.

கொரானா ஊரடங்கு வந்து அவர்களது கள்ளு தாகத்துக்கு தடை  போட்டு விட்டது. ஆனாலும் கள்ளு  ரசிகர்கள் “நாங்கள் என்ன மதுக்கடையையா திறக்கச்சொல்றோம். கள்ளு கடையைத் தானே திறக்கச்சொல்றோம் ” என மனு கொடுத்து கேரளா அரசின் கலால் துறையின் மனதை கனிய வைத்து விட்டார்கள்.

சின்னச்  சின்ன ஊர்களில் கூட கள்ளு கடைகள் இருக்கிறது.

பல நிபந்தனைகளுடன் கடையை திறந்து விட்டிருக்கிறது கேரளா அரசு.

ஒரு நேரத்தில் 5 பேர்தான் சமூக இடைவெளி விட்டு மாஸ்க் அணிந்து கொண்டு நிற்க வேண்டும்.

ஒரு ஆளுக்கு ஒன்னரை லிட்டருக்கு மேல் கிடையாது. அதுவும் உட்கார்ந்து குடிக்க முடியாது.பார்சல்தான்.!

சைடு டிஷ் மீன் வகையறாக்கள் எதுவும் கிடையாது. ஊறுகாய் கூட இல்லை. இதுதான் அனுமதி.இஷ்டமின்னா பாட்டிலோடு வா.வாங்கிட்டுப் போ!

கள்ளு கடை திறப்பு.கேரளம்