பிரபல நடிகைக்கு கொரோனா? பங்களாவுக்கு சீல்!

ஒரு காலத்தில் திரையுலகில் காதல் மன்னனாக வலம்வந்த மறைந்த பழம்பெரும் நடிகர் ஜெமினிகணேசனின் மகள் பிரபல இந்தி நடிகை ரேகா.  பாலிவுட்டில் அமிதாப் உட்பட பல முன்னணி இந்தி ஹீரோக்களுடன் சுமார் 180 படங்கள் வரை நடித்துள்ளார். இவர் மும்பையில் பாந்த்ராவில் உள்ள பிரமாண்ட பங்களாவில் வசித்து வருகிறார். தற்போது இவரது பங்களாவுக்கு வெளியே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட வீடு. என  போஸ்டர் ஒட்டப்பட்டதால்  பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நடிகை ரேகாவுக்கு , கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்பட்ட நிலையில், நடிகை ரேகாவின் வீட்டில் காவலாளியாக  பணியாற்றியவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது  தெரிய வந்தது . இதையடுத்து , நடிகை ரேகாவின்  பங்களாவுக்கு மும்பை மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக  சீல் வைத்தனர்.  நடிகை ரேகாவின் வீட்டில் பணியாற்றும் இரண்டு  காவலாளிகளில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதையடுத்து நடிகை ரேகாவின் வீட்டில் உள்ள அனைவருக்கும் மும்பை மாநகராட்சி மருத்துவர்கள் மூலம் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.நடிகை ரேகா, மாநகராட்சி மருத்துவர்களிடம் பரிசோதனை செய்துகொள்ளவில்லை. தனியாக பரிசோதனை செய்து அறிக்கையை மாநகராட்சிக்கு சமர்பிப்பதாக கூறியுள்ளதாகவும் தெரிகிறது.  அதோடு பங்களா முழுவதும் சீல் வைக்கவில்லை என்றும், காவலாளிகள் தங்கி  இருந்த அறை மட்டுமே சீல் வைக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் நடிகை ரேகாவிற்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளதா,இல்லையா? என்பது அவரது பரிசோதனை முடிவில் தான் தெரிய வரும் என்கின்றனர் மும்பை மாநகராட்சி அதிகாரிகள்.