பிரபல நடிகைக்கு கொரோனா? பங்களாவுக்கு சீல்!
ஒரு காலத்தில் திரையுலகில் காதல் மன்னனாக வலம்வந்த மறைந்த பழம்பெரும் நடிகர் ஜெமினிகணேசனின் மகள் பிரபல இந்தி நடிகை ரேகா. பாலிவுட்டில் அமிதாப் உட்பட பல முன்னணி இந்தி ஹீரோக்களுடன் சுமார் 180 படங்கள் வரை நடித்துள்ளார். இவர் மும்பையில் பாந்த்ராவில் உள்ள பிரமாண்ட பங்களாவில் வசித்து வருகிறார். தற்போது இவரது பங்களாவுக்கு வெளியே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட வீடு. என போஸ்டர் ஒட்டப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.