இந்தி திரைப்பட உலகின் ‘பிக்பாஸ்’ அமிதாப்பச்சனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்ய்யப்பட்டுள்ளது. இதையடுத்து நடிகர் அமிதாப்பச்சனும், ‘தனக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இது இந்திய திரையுலக பிரபலங்கள், நடிகர்,நடிகைகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை தென்னிந்திய,வடஇந்திய ஏற்படுத்தியுள்ளது.
மேலும்,அமிதாப்பச்சன் மகனும் நடிகருமான அபிசேக் பச்சனுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.அபிஷேக் பச்சனும் தனது டுவிட்டர் பதிவில், “ எனக்கும் எனது தந்தைக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இருவருக்குமே லேசான அறிகுறிகளே தென்பட்டன. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறோம்.எங்கள் குடும்பத்தினர் மற்றும் தொடர்பில் இருந்தவர்களை பரிசோதிக்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளோம். அனைவரும் அமைதியாக இருங்கள். அச்சப்பட வேண்டாம்” என்று பதிவிட்டுள்ளார் .
அதே சமயம் நடிகை ஐஸ்வர்யா ராய் மற்றும் ஜெயா பச்சனுக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.அமிதாப்பின் ரசிகர்கள்,தென்னிந்திய,வடஇந்திய நடிகர்கள்,நடிகைகள் என பலரும் அமிதாப்பச்சனும், அபிஷேக் பச்சனும் விரைவில் குணமடைய வேண்டி பிரார்த்தனை செய்து வருவதாக தங்களது சமூகவலைத்தளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.அமிதாப் மும்பை நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.