உலகநாயகனின் 61 ஆம் ஆண்டு திரை வாழ்வு விழா !

சூப்பர்ஸ்டார் ரஜினியின் 45 ஆண்டு கால சினிமா வாழ்வு குறித்து திரை உலக பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து பாராட்டு மாலைகளை குவித்திருந்தார்கள்.

அப்போதே உலகநாயகன் கமல்ஹாசனுக்கு ஏன் இப்படி ஒரு பாராட்டுகள் அவருடைய 45 ஆண்டு பயணத்தின் போது கொண்டாடப்படவில்லை என்கிற கேள்வி எழுந்தது .

அதற்கு நடிகை ஆண்ட்ரியா பதில் அளிப்பதைப்போல ஒரு போஸ்டரை வெளியிட்டிருக்கிறார்.

ஆகஸ்ட் 12 ஆம் தேதி கமலிஸம் 61 ஆண்டுகள் விழா நடக்கப்போவதாக!

அந்த போஸ்டரில் மீசை முறுக்கிய கமல் சிறுவன் கமலை தூக்கி வைத்திருப்பதை போல இருக்கிறது.

61 ஆம் ஆண்டுவிழாஆண்ட்ரியாஉலகநாயகன்கமல்ஹாசன்