சூப்பர்ஸ்டார் ரஜினியின் அரசியல் கட்சி நவம்பரில் உதயம் ஆகிறது என்பதை சென்னை மறுத்தாலும் டில்லி உண்மை என்பதாக ஒப்புதல் அளிக்கிறது.
சென்னை,மற்றும் டில்லியில் இருக்கிற ரஜினியின் ஆதரவாளர்கள் ,வக்கீல்கள் அரசியல் கட்சியை பதிவு செய்கிற வேலைகளை ஆரம்பித்திருக்கிறார்கள்.
அவர்கள் சொன்ன தகவல்களின் படி நவம்பர் மாத மத்தியில் புதிய கட்சியின் பெயரை அறிவிப்பார் .அதன் பின்னர் ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களை ஜூம் வழியாகவும் சிலரை நேரடியாகவும் சந்தித்துப் பேசுகிறாராம்.மற்றபடி மதுரை மாநாடு என்பதெல்லாம் உறுதியா என்பதை சொல்ல இயலாது. கொரானா காரணமாக அது தவிர்க்கப்படலாம் என்கிறது டெல்லி .அதாவது டெல்லியில் உள்ள ரஜினியின் பிரதிநிதிகள்.