லாக்டவுன் காலத்தில் குண்டாகிய கதாநாயகன். இயக்குநர் கோபம் !

ஸ்ரீ சக்திவேல் சினி கிரியேஷன்ஸ் பட நிறுவனம் தயாரித்து வரும் புதிய படம், ” காகித பூக்கள்  கதையின் நாயகனாக லோகன் அறிமுகமாகிறார். இன்னொரு நாயகனாக பிரவீண்குமார் நடிக்கிறார்.

ப்ரியதர்ஷினி கதாநாயகியாக நடிக்கும் இதில் தில்லைமணி, தவசி , ரேகா சுரேஷ், அலெக்ஸ், பாலு மற்றும் பலர் நடிக்கின்றனர்.

இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம், எழுதி தயாரித்து  இயக்குனராக அறிமுகமாகிறார் முத்துமாணிக்கம்.    

 படப்பிடிப்பு கடந்த மார்ச் மாதம் ஒட்டன்சத்திரம், பழனி, சந்திர பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ளபகுதிகளில் நடந்து வந்த நிலையில்,கொரோனாஊரடங்கு அறிவிப்பால், படப்பிடிப்பை பாதியிலேயே முடித்துவிட்டு, ஊரடங்கின் தளர்வு அறிவித்த பின் மீண்டும் படப்பிடிப்பை தொடர முடிவு செய்து, படப்பிடிப்பு குழுவினருடன் ஊர் திரும்பினார் இப்பட த்தின் கதை, திரைக்கதை, வசனம், எழுதி தயாரித்து இயக்குநராக களமிறங்கும் முத்துமாணிக்கம்.

,அரசு ஊரடங்கை தற்போது தளர்த்தி, மீண்டும் படப்பிடிப்பை நடத்தலாம்  என அறிவித்துள்ளதால்  உடனே படப்பிடிப்பு நடத்த இயக்குனர் முடிவெடுத்து அதற்கான பணிகளை தொடங்கிய இயக்குனருக்கு கதாநாயகன் லோகனை பார்த்ததும் கடும் அதிர்ச்சி.

காரணம்,  5 மாத ஊரடங்கில் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடந்ததால் உடல் எடை கணிசமாக கூடிவிட்டது.

அய்யய்யோ வரும் 15 ம் தேதி  சூட்டிங் இருக்கே என பதறியதும்,அதுக்குள்ள கண்டிப்பா குறைச்சுடுவேன் சார் என்றவர் இரவு பகலாக  கடுமையான உடற்பயிற்சியில் ஈடுபட்டுள்ளார் கதாநாயகன் லோகன். 

இந்தப் படத்தின் படப்பிடிப்பு வரும் 15 ம் தேதி முதல் திண்டுக்கல்லில் தொடங்கி,  தொடர்ந்து பொள்ளாச்சியில் நடக்கவுள்ளது இப்படத்தின் ஒளிப்பதிவை,சிவபாஸ்கர்  கவனிக்க,இத்தோஷ் நந்தா இசையமைத்து வருகிறார்.

காகிதப்பூக்கள்முத்துமாணிக்கம்லோகன்