இந்த வாரம் கேரட் வாரம் என சமூக வலைதளத்தில் கேரட்டுகளுடன் தோன்றும் புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டார். அவருக்கு பாராட்டுக்களும் குவிந்தது .இந்நிலையில் சமந்தா அடுத்த அதிரடியாக தற்போது 108 முறை சூரிய நமஸ்காரம் செய்யும் முறையை ஆரம்பித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியுள்ளதாவது, ’ஒரு நல்ல தொடக்கமாக இந்த வாரம் முதல் 108 முறை சூரிய நமஸ்காரத்தை ஆரம்பிக்க உள்ளேன். எனது பயிற்சியாளர் சந்தோஷ் அவர்களுக்கு நன்றி’ இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்