கமல்ஹாசனின் ‘232’ -வது படத்தலைப்பு இதுவா?

உலகநாயகன் கமல்ஹாசன்  நடிப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாகவிருக்கும் திரைப்படம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.

கமல்ஹாசனின் 232 வது படமாக உருவாகும் இப்படத்தின்  டைட்டில் ’எவனென்று நினைத்தாய்’ என்றும் அவரது ரசிகர்களால் கூறப்பட்டது.ஆனால் இதை ராஜ்கமல் பட நிறுவனம் மறுத்து இருந்தது.

இந்நிலையில் கடந்த 1980 ஆம் ஆண்டில் கமல்ஹாசன், ஸ்ரீதேவி நடிப்பில், ஐவி சசி இயக்கிய  ‘சூப்பர் ஹிட்’ படமான ’குரு’ திரைப்படத்தின் தலைப்பையே  கமல் ஹாசன் தனது 232வது படத்திற்கும் தலைப்பாக   தேர்வு செய்து இருப்பதாகவும், இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் விரைவில் அறிவிக்கும் என்றும் பேசப்படுகிறது.

அதே சமயம் இப்படத்தின் தலைப்பை , சின்னத்திரை நிகழ்ச்சியில் கமல் அதிகார பூர்வமாக அறிவிப்பார் அதுவரை படத்தலைப்பு குறித்து வெளியாகும் எந்த தகவலும் உறுதியானது அல்ல என்கிறது கமலதரப்பு.