காதல் பறவைகள் கூட்டுக்குத் திரும்பிவிட்டன.
கல்யாணம் செய்து கொண்டு ஊர் சுற்றினால் அது தேனிலவு.
கல்யாணம் செய்யாமலேயே ஊர் சுற்றினால் அதுவும் தேனிலவுதான்! தேனிலவில் என்னென்னெ நிகழுமோ அவைதானே நடந்திருக்க முடியும்?.
சரி, இதற்கு மேல் விவரிக்க வேண்டியதில்லை.
கடந்த சில நாட்களுக்கு ஓணம் பண்டிகையை கொண்டாட, நடிகை நயன்தாரா மற்றும் அவரின் காதலர் இயக்குனர் விக்னேஷ் சிவன் ஆகிய இருவரும் கேரளாவுக்கு தனி விமானத்தில்சென்றனர்.
காதலர் விக்னேஷ் சிவனுடன் கொச்சி விமான நிலையத்தில் தனி விமானத்தில் வந்து இறங்கிய நயன்தாராவின் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாக பரவின..
இதையடுத்து இருவரும் கோவாவுக்கு தனிவிமானம் மூலம் சுற்றுலா சென்றனர். அங்குள்ள ரெசார்ட் ஒன்றில் அவர்கள் தங்கியிருந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தனர். இந்நிலையில் கோவாவுக்கு சுற்றுலா சென்றிருந்த நடிகை நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் மீண்டும் தனி விமானத்தில் சென்னை திரும்பிவிட்டனர்.
கோவா அனுபவம் சுகமோ சுகம்.!
புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் மீண்டும் வைரலாகி வருகின்றன.