சர்வதேச அரங்கில் அனிருத் பாடல் அசத்தல்.!

பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ், காஜல் அகர்வால், விஜய் யேசுதாஸ், ரோபோ சங்கர், காளி வெங்கட் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2015-ம் ஆண்டு வெளியான படம் ‘மாரி’.
இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்திருந்தார். இந்த படத்தில் இடம்பெற்ற , ‘தர லோக்கல்’ பாடலை  தனுஷ் எழுதி பாடி இருந்தார்
 இப்பாடல் அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது.
இந்த நிலையில் இந்த பாடல் தற்போது பிரிட்டனில் நடைபெற்ற சர்வதேச ரியாலிட்டி ஷோவில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஷோவில் கலந்து கொண்ட மும்பையைச் சேர்ந்த நடன குழு ஒன்று ’மாரி’ படத்தின் பாடலை பயன்படுத்தி அசத்தலாக நடனம் ஆடி நடுவர்களை அசர வைத்துள்ளனர்.
அனிருத்தின் இசையில் உருவான பாடல் ஒன்று சர்வதேச ரியாலிட்டி ஷோவில் பயன்படுத்தப்பட்டுள்ள தகவலை இயக்குனர் பாலாஜி மோகன் தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டு,மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். 
அனிருத்தனுஷ்மாரி