இப் படம் மூன்றாம் உலகப் போரை மையமாக வைத்து சயின்ஸ் பிக்சன் படமாக உருவாகிறது என்கிறார்கள். வைஜெயந்தி மூவிஸ் தயாரிக்கும் இந்தப் படமும், சுமார் ரூ.400 கோடி பட்ஜெட்டில் தமிழ், தெலுங்கு,இந்தி, உள்ளிட்ட மொழிகளில் உருவாகிறது. இதில் தீபிகா படுகோன் கதாநாயகியாக நடிக்கிறார்.
இந்நிலையில் இப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் வேடத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் நடிக்கிறார். இது குறித்து,தயாரிப்பாளர் அஸ்வினி தத் கூறியுள்ளதாவது, “இந்திய சினிமாவின் மிகச்சிறந்த அடையாளமான ஸ்ரீ பச்சன் அவர்களை எங்கள் வைஜயந்தி மூவிஸ் தயாரிக்கும் இந்த மதிப்புமிக்க திரைப்படத்தின் ஒரு அங்கமாக வரவேற்பது உண்மையில் எனக்கு மிகவும் திருப்திகரமான மற்றும் பெருமைமிகு தருணமாகும்.
இந்த தயாரிப்பு நிறுவனம் ஸ்ரீ என்.டி.ஆர் அவர்களுடன் தன் பயணத்தை தொடங்கி அவராலேயே பெயரிடப்பட்டது.” இவ்வாறு அவர் கூறியுள்ளார். இப்படம் 2022 ஆம் ஆண்டு முழுவதும் வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.