கவர்ச்சியின் அடையாளங்களில் நடிகை சனாகானும் ஒருவர் .
சிம்புவின் ‘சிலம்பாட்டம்’ படத்தின் வழியாக தமிழுக்கு அறிமுகம். பின்னர் ‘பயணம்’ ‘நடிகையின் டைரி ‘ என தொடர்ந்தவர் தெலுங்கு என பிற மொழிப்படங்களில் தனது கவர்ச்சிப்பயணத்தைத் தொடர்ந்தார்.
இந்த கவர்ச்சி நடிகையின் வாழ்வில் என்ன மற்றம் ஏற்பட்டதோ தெரியவில்லை.!
முன்னொரு காலத்து கவர்ச்சி நடிகை தீபா திடீரென கன்னியாஸ்திரியாக மாறியதை போல சனாகானும் மனித சேவை என புதிய வாழ்க்கையை தொடங்கி விட்டார்.
“மனிதனோ ,மனுஷியோ எப்பவும் இறந்து போகலாம் .மரணம் என்பது சொல்லிவிட்டு வருவதில்லை.
இறந்த பின்னர் அவன் என்னவாகிறான்? இந்த கேள்விக்கான விடையைத் தேடினேன், எனது மதம் இது பற்றி என்ன சொல்கிறது?
இந்த மரணத்துக்குப்பின்னர்தான் வாழ்க்கையை மேம்படுத்த வேண்டும் என்பதை உணர்ந்தேன். எனவே படைத்தவனின் கட்டளைக்கு இணங்க பாவப்பட்ட மனித வாழ்க்கையை தவிர்த்து மனித இனத்துக்கு சேவை செய்ய முடிவு செய்திருக்கிறேன்.
அதனால் சினிமாவுக்கு நிரந்தரமாக விடை கொடுத்து விட்டேன் .இனிமேல் எவரும் என்னை சினிமாப்பணிக்கு கூப்பிட வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்பதாக கேட்டுக்கொண்டிருக்கிறார்.