நடிகை திரிஷா, யுனிசெப் அமைப்பில் குழந்தைகள் உரிமைக்கான நல்லெண்ண தூதராகவும் பொறுப்பேற்று உள்ள நடிகை திரிஷா, .இந்நிலையில் திரிஷா, குழந்தை திருமணம், பாலியல் வன்கொடுமை பற்றிய இணையதளம் மூலமாக பெண்கள் மற்றும் குழந்தைகளுடன் கலந்துரையாடினார். அப்போது, கொரோன வைரஸ் பரவி வரும் சூழலில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த நடவடிக்கைகளை தைரியமாக மேற்கொண்ட யுனிசெப் பணியாளர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்த திரிஷா,குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு எதிராகவும் ம், குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்தி, ஒரு முடிவு கட்ட வேண்டும். அதற்கு அரசு புதிய சட்டம் ஒன்றை உருவாக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.