வாழவைத்த தமிழர்களை விட 800 படம் பெரிதா? விஜய்சேதுபதிக்கு சேரன் வேண்டுகோள் !

உலக தமிழ் மக்களின் கோரிக்கையை ஏற்று முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு படத்தில் இருந்து விலக வேண்டும் என நடிகர் விஜய் சேதுபதிக்கு இயக்குநர் சேரன் அறிவுறுத்தியுள்ளார்.
 
இது குறித்து இயக்குனர் சேரன் தனது சமூக வலைதளபக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது,

“உலகம் முழுவதுமிருந்து தமிழர்களின் வேண்டுகோள் 800 வேண்டாம் என.. உங்களை வாழவைத்த மக்களை விட, உணர்வை விட, தமிழ் ஈழ மக்களின் உயிர்போன கொடும் நிகழ்வை விட இந்தப்படம் பெரிதல்ல சகோதரா.. விட்டுவிடுங்கள். உங்களின் நடிப்புத்தீனிக்கு ஆயிரம் கதாபாத்திரங்கள் காத்திருக்கிறது..

800சேரன்விஜயசேதுபதி