இப் படம் ‘ஓடிடி’ தளத்தில் வரும் நவம்பர் 9 -ம் தேதி வெளியாகிறது. சமீபத்தில்இப்படத்தின் டிரைலர் வெளியாகி, இந்தி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், ‘இப்படத்தின் தலைப்பு பெண் தெய்வமான லட்சுமி தேவியை களங்கப்படுத்துவது மற்றும் தெய்வத்தின் கண்ணியத்தை குறைத்து, அவமரியாதை செய்வது போல இருக்கிறது என்றும் உடனடியாக இந்த படத்தின் தலைப்பை மாற்ற வேண்டும் என ஶ்ரீராஜ்புத் கர்னி சேனா என்ற அமைப்பு, இப்படத்தின் தயாரிப்பாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியது.
அதே போல நடிகர் முகேஷ் கண்ணா உள்ளிட்ட சிலரும் இப்படத்தின் தலைப்புக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில், இப்படத்தின் தலைப்பு விவகாரம் தீவிரமாவதை தடுக்கும் வகையில், படத் தயாரிப்பாளர்கள் அதிரடியாக படத் தலைப்பில் இருந்த ‘பாமை’ தூக்கி விட்டு ‘லக்ஷ்மி’ என வைத்துள்ளனர்.