அதிரடியில் இறங்கிய நடிகர் விஜய்!தந்தையின் ஆதரவாளர்கள் அடியோடு நீக்கம்!!

நடிகர் விஜய் பெயரில் இயங்கி வந்த ‘ரசிகர் மன்றத்தை’ அவரது தந்தை எஸ்.ஏ.சி, ‘அரசியல்’ கட்சியாக பதிவு செய்த விவ­கா­ரம், தந்­தை-ம­கன் இடை­யில் பெரிய பிளவையும்,கடும் மோதலையும் ஏற்­ப­டுத்தி உள்­ளது. தனது அம்மாவையே அப்பா எஸ்.ஏ.சிக்கு எதிராக பேட்டியளிக்கவும் வைத்தார்.

இந்­நி­லை­யில் கடந்த 2 நாட்­க­ளுக்கு முன்பு நடி­கர் விஜய் தனது மாநில மாவட்ட முக் ­கிய நிர்­வா­கிகளை, தனது தந்தையை விட மேலாக நம்பும் தனது மன்ற தலைமை பொறுப்பாளர் புஸ்ஸி ஆனந்த் மூலம் அழைத்து, தனது தந்தை தொட ங்கியுள்ள புதிய கட்சிக்கு யாரும் ஆதரவு தெரிவிக்கவோ, நேரடியாகவோ,மறைமுகமாகவோ ஈடுபடக்கூடாது என கடுமையாக எச்சரித்தவர், எஸ்.ஏ.சியின் தீவிர ஆதரவாளர்கள் யார்,யார் என்­பது குறித்­தும் தகவல்களை திரட்டியதோடு , (முன்னதாக எஸ்.ஏ.சியின் ஆதரவாளர்கள் என கருதப்படுகிற ஒருவருக்கும் அழைப்பு மன்றத்தலைமையிடம் இருந்து அனுப்பப்படவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது) . முதல் வேலையாக மாவட்டம் வாரியாக விஜய் மக்­கள் இயக்­கத்­தில் நிர்­வா­கி­க­ளாக இருக்­கும் தனது தந்தை எஸ்.ஏ.சந்­தி­ர­சே­க­ரின் தீவிர ஆத­ர­வாளர்­களை அடி­யோடு நீக்கியதோடு , அவர்­க­ளுக்கு பதி­லாக, புஸ்ஸிஆனந்த் கைகாட்டும் புதிய நிர்­வா­கி­க­ளின் அறி­விப்பு பட்­டி­யலை தனது கையெழுத்துடன் விஜய் வெளியிட்டு வருகிறார் என்கிற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

மேலும் இனி விஜய் மக்­கள் இயக்­கத்­தி­னர் கொடி,மற்­றும்விஜய்­யின்புகைப்­படங்­கள்ஆகி­ய­வற்றை பயன்­ப­டுத்த விஜய்மக்­கள்இயக்கபொறுப்­பா­ளர் அனு­மதிபெற­வேண்­டும் என்­றும்,மேலிட ஒப்­பு­தல் இன்றி தனிமுடிவு எது­வும் எடுக்ககூடாது என்ற கட்­டுப்­பாடு விதிக்­கப்­பட்­டுள்­ளது.அதேபோல் தனது விஜய் மக்­கள்­இ­யக்­கம் அலு­வ­ல­கத்தைதனது பனை­யூர் இல்­லத்­திற்கு மாற்­றி­யுள்­ளார். இச்­சம்­ப­வம்எஸ்.ஏ.சந்­தி­ர­சே­கர் ஆத­ர­வா­ளர்­கள் மத்­தி­யில்பெரும் பர­ப­ரப்பை ஏற்­படுத்தி
உள்­ளது.