இடத்தகராறில் விபரீதம் : 2 பேரை துப்பாக்கியால் சுட்ட தியேட்டர் உரிமையாளர் தலைமறைவு!

பழனி ரெயில்வே பீடர்ரோட்டை சேர்ந்­த­வர் நட­ரா­ஜன் இவருக்கு இவருக்கு பழனியில் சொந்தமாக தியேட்டர் உள்ளது. இவ­ருக்­கும் அதே பகு­தியை சேர்ந்த பழ­னிச்­சாமி,மற்றும் சுப்­பி­ர­மணி ஆகி­யோ­ருக்­கும் இடையே இடத்­த­க­ராறு இருந்துவந்­தது.இந்நிலையில், இன்று காலை பழ­னிச்­சாமி,மற்றும் சுப்­பி­ர­மணி ஆகிய இருவரும், நிலத்தகராறு தொடர்பாக நட­ரா­ஜன் வீட்­டிற்கு சென்­ற­னர்.

அப்­போது அவர்­களுக்கு இடையே நடந்த பேச்சு வார்த்தை முற்றி,வாக்­கு­வா­தம் ஏற்­பட்ட து கைகலப்பு ஏற்படும் சூழல் உருவானது. இதில் ஆ த்தி­ரம் அடைந்த நட­ரா­ஜன் தனது வீட்­டில் இருந்த துப்­பாக்­கியை எடுத்து பழ­னிச்­சா­மி­, மற்றும்  சுப்­பி­ர­ம­ணிஆகியோரை நோக்கி சுட்­டார். இதில் பழ­னிச்­சாமி­யின் வயிற்­றில் குண்டு பாய்ந்தது. சுப்­பி­ர­ம­ணி­ய­னின் பின் தொடை­யில் காயம் ஏற்­பட்­டது.

உடனே அவர்­கள் பழனி அரசு மருத்­து­வ­ம­னைக்கு கொண்டு செல்­லப்­பட்­டனர். அங்கு அவர்­க­ளுக்குதீவிர சிகிச்சை அளிக்­கப்­பட்டு வரு­கி­றது.இது ­கு ­றித்து பழனி டவுண் போலீ­சா­ருக்கு தகவல் கொடுக்­கப்­பட்­டது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீ­சார் விசா­ரணை நடத்­தி,தியேட்­டர்அதி­பர் நட­ரா­ஜன் மீதுவழக்­குப்­ப­திவு செய்து அவரைதேடி வரு­கி­றார்­கள்.இந்த சம்­ப­வம்அந்த பகு­தி­யில் பெரும் பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்தி உள்ளது.