திருமணத்தில் முடிந்த சினிமா படத்தொகுப்பாளரின் 10 வருட காதல் !

தமிழ்சினிமாவின் தற்போதைய முன்னணி படத்தொகுப்பாளராக வலம் வருபவர்  செல்வா ஆர்.கே. இவர்,பரியேறும் பெருமாள் ,  இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு, மூக்குத்தி அம்மன், பிஸ்கோத்,என பல படங்களுக்கு படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். தற்போது தனுஷ் மாரிசெல்வராஜ் கூட்டணியில் உருவாகி வரும்   கர்ணன், பா.ரஞ்சித்தின் சல்பேட்டா உள்பட பல  முன்னணி படங்களுக்கு எடிட்டராக பணியாற்றுகிறார்.இவரும் சென்னையை சார்ந்த அனிதா என்பவரும்  பத்து வருடங்களுக்கு மேலாக காதலித்து வந்துள்ளனர்.சினிமாவில் எதையாவாது சாதித்துவிட்டுத்தான் திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்று உறுதியாக பத்துவருடங்களாக காத்திருந்திருந்த இவர்கள், பல்வேறு முயற்சிகளுக்குப்பிறகு  இரு வீட்டாரிடமும் சம்மதம் பெற்று   சென்னையில் இவர்களது  திருமணம் நடைபெற்றது.திருமணத்தில் பல்வேறு சினிமா பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டார்கள்.