“சிலம்பரசனை வைத்து படம் எடுக்கிறேனா?”-டி .ராஜேந்தர் விளக்கம்.!

“எல்லாம் அந்த திருச்செந்தூர் முருகன் பார்த்துப்பான்” என்றார் சகலகலாவல்லவன் டி .ராஜேந்தர்.

என்ன நடந்தது என்று அறுபடைவீடுகளுக்கு அதிபதியான முருகனை நாடுகிறார்?

“தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் நடந்தது. போலியான  வாக்காளர்களைப்  பற்றிய  எனக்கு பெருத்த சந்தேகம் இருந்ததால் தேர்தலதிகாரியிடம் என் குற்றச்சாட்டுகளை கடிதம் வழியாக  கொடுத்திருக்கிறேன். அதற்கு இன்று வரை எந்தவிதமான பதிலும் அரசு அதிகாரியிடம் இருந்து கிடைக்கவில்லை. அதுதான் முருகனிடம் முறையிட்டேன் ” என்றார் டி .ஆர்.

“சிலம்பரசனை வைத்து சிம்பு சினி ஆர்ட்ஸ் படம் எடுப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கிறதே? எப்போது ஆரம்பம்?”

“இன்னும் எந்த விதமான முடிவும் எடுக்கவில்லை. புயல் என்று கூட பார்க்காமல் சிலம்பரசன் பாண்டிச்சேரியில் படப்பிடிப்பில் கலந்து கொண்டிருக்கிறார். ஏழுக்கு மேற்பட்ட தயாரிப்பாளர்கள் கதையுடன் அவருக்காக காத்திருக்கிறார்கள். அதி காலையில் எழுந்ததும் சிவனை வணங்கிவிட்டு ஷூட்டிங் ஸ்பாட்டில் ஏழு மணிக்கெல்லாம் நின்றுவிடுகிறார். புதிய முனைப்புடன் எழுச்சியுடன் படப்பிடிப்புகளில் கலந்து கொண்டுவருகிறார்.சிம்பு சினி ஆர்ட்ஸ் படம் தயாரிப்பது பற்றி இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை .இதுதான் உண்மை” என்கிறார் டி.ராஜேந்தர்.

சிம்பு சினி ஆர்ட்ஸ்சிலம்பரசன்டி.ராஜேந்தர்தயாரிப்பாளர் சங்கம்