“எல்லாம் அந்த திருச்செந்தூர் முருகன் பார்த்துப்பான்” என்றார் சகலகலாவல்லவன் டி .ராஜேந்தர்.
என்ன நடந்தது என்று அறுபடைவீடுகளுக்கு அதிபதியான முருகனை நாடுகிறார்?
“தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் நடந்தது. போலியான வாக்காளர்களைப் பற்றிய எனக்கு பெருத்த சந்தேகம் இருந்ததால் தேர்தலதிகாரியிடம் என் குற்றச்சாட்டுகளை கடிதம் வழியாக கொடுத்திருக்கிறேன். அதற்கு இன்று வரை எந்தவிதமான பதிலும் அரசு அதிகாரியிடம் இருந்து கிடைக்கவில்லை. அதுதான் முருகனிடம் முறையிட்டேன் ” என்றார் டி .ஆர்.
“சிலம்பரசனை வைத்து சிம்பு சினி ஆர்ட்ஸ் படம் எடுப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கிறதே? எப்போது ஆரம்பம்?”