மதுரை விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.அப்போது அவர் கூறியதாவது: கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பாக மதுரையில் தொடங்கியது மக்கள் நீதி மய்யம். அதனால் இங்கிருந்து பிரசாரம் செய்வதுதான் உசிதம் என்று தோன்றியதால் இங்கிருந்து துவங்குகிறோம்.
சில அனுமதிகள் மறுக்கப்பட்டாலும் பொங்கிவரும் புது வெள்ளத்திற்கு சிறுமடைகள் தடையாகாது.சட்டத்திற்கு உட்பட்டு எப்படியெல்லாம் பிரசாரம் செய்ய திட்டமிட்டு இருக்கிறோமோ அதன்படியே பிரச்சாரம் நடக்கும்.
மக்களை சென்று அடைய முடியும், அந்த நம்பிக்கை இருக்கிறது.
சட்டத்திற்கு உட்பட்டு விதிமுறைகளுக்கு உட்பட்டு தான் செய்வதாக இருக்கிறோம். அதை மீறும் எண்ணம் எங்களுக்கு இல்லை. யாருக்கெல்லாம் எங்களது கருத்து யாருக்கு குத்தலாக இருக்கிறதோ அவர்கள் தடை செய்வார்கள்.
அதையும் மீறிதான் இந்த பிரச்சாரம் நடக்கும். நான் இதற்கு முன்பு கூறி இருக்கிறேன் அணிகள் பிளவுபடும் அணிகள் கூடும். இப்போது இதுதான் சொல்ல முடியும்.
இவ்வாறு கமல் ஹாசன் கூறினார்.மேலும் தனது டுவிட்டரில்,
“காசுக்காகக் கூடுவது கும்பல்;
லட்சியத்திற்காகத் திரள்வதன் பெயர் புரட்சி! மக்கள் புரட்சியை மதுரையில் நிகழ்த்திக் காட்டிய எம் கட்சியின் அனைத்து நிர்வாகிகளுக்கும், அணிகளுக்கும், உறுப்பினர்களுக்கும் என் மனமார்ந்த பாராட்டுகள்.#எதுவும்_தடையில்லை
#சீரமைப்போம்_தமிழகத்தை என்றும் பதிவிட்டுள்ளார்.