“சரிகம ” மற்றும் “அமேசான் பிரைம் மியூசிக் ” இணைந்து வழங்கும் ஒரு நவீன இசை விருந்து.
இந்தத் தொகுப்பில் மனதில் இடம் பிடித்த பழைய பாடல்களை தற்கால இசையமைப்பாளர்களும், பாடகர்களும் புதிய பரிமாணத்துடன் அரங்கேற்றியுள்ளனர்.
பிரபல இசையமைப்பாளர்/நடிகர்/இயக்குனருமான விஜய் ஆன்டனி “நினைத்தாலே இனிக்கும்” என்கிற திரைப்படத்தில் அமைந்த “நம்ம ஊரு சிங்காரி” எனும் பாடலின் வீடியோ பதிப்பு சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்த இசை தொகுப்பில் மேலும் 6 பாடல்கள் வெளியாக உள்ளது,
இசையமைப்பாளர்கள் தரன் குமார், சி. சத்யா, கிரீஷ் கோபாலகிருஷ்ணன், அருள் தேவ்,புல்லாங்குழல் நவீன் ஆகியோர் இசைஅமைத்துள்ளனர் . பிரபல வீணை கலைஞர் ராஜேஷ் வைத்யா பாடகர் கார்த்திக் அவர்களுடன் இணைந்து ஒரு பாடலுக்கு இசையமைத்துள்ளார்.
பாடகர்கள் சின்மயீ, சைந்தவி, தன்வீஷா, விஜய் பிரகாஷ், சத்திய பிரகாஷ், நித்யஸ்ரீ வெங்கட்ராமன், சூரஜ் சந்தோஷ் ஆகியோர் பாடல்களை பாடியுள்ளனர். இந்த பாடல்கள் அனைத்தும் வீடியோ வடிவில் விரைவில் வெளியாக உள்ளது.
Sahas Malhotra , Director, அமேசான் பிரைம் மியூசிக் இயக்குநர் சஹஸ் மல்கோத்ரா இதைப்பற்றி கூறுகையில்
“பழைய பாடல்களின் மறுபதிவு (ரெட்ரோ) பிரைம் மியூசிக் ரசிகர்களுக்கு மிகவும் விருப்பமான இசை வகை ஆகும். “Caarvan Lounge Season 1” மக்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றது. இன்றைய சிறந்த சமகால தமிழ் பாடகர்களால் மீண்டும் உருவாக்கப்பட்ட அற்புதமான பாடல்களுடன் தமிழ் இசை ஆர்வலர்களை மகிழ்விக்க இம்முறை Saregama வுடன் மீண்டும் இணைவதில் நாங்கள் பெருமகிழ்ச்சியடைகிறோம்”என்கிறார்.
சரிகமவின் ரஸ்னா போச்சன்வாலா கூறும்போது “.தமிழ் இசைத் துறையில் மிகவும் பிரபலமான பாடகர்கள் மற்றும் இசையமைப்பாளர்கள் அருமையான பழைய பாடல்களைத் தேர்வு செய்துள்ளனர் . ஒவ்வொரு பாடலின் மறுபதிவு ஒரு தனித்துவமான இசைக் கருவியின் ஒலியைக் கொண்டிருக்கின்றன, இது அனைத்து இசை ஆர்வலர்களுக்கும் ஒரு விருந்தாக இருக்கும் என்பது உறுதி.”என்றார் .