‘அப்பா’வானார் நடிகர் யோகிபாபு!
By
admin on December 28, 2020
கடந்த பிப்ரவரி மாதம் 5ஆம் தேதி சினிமா நட்சத்திரங்கள் எவரும் அழைக்கப்படாமல், படுரகசியமாக செய்யாறு அருகேயுள்ள மேல்நகரம்பேடு என்கிற கிராமத்திலுள்ள பிள்ளையார் கோயில் ஒன்றில், நகைச்சுவை நடிகர் நடிகர் யோகி பாபு மஞ்சு பார்கவி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இதனை தொடர்ந்து கடந்த ஏப்ரல் மாதம் சென்னையில் தனது திருமண வரவேற்பை நடத்த திட்டமிட்டிருந்தார் யோகி பாபு. ஆனால் கொரோனா லாக்டவுன் காரணமாக அதை நடத்த முடியாத நிலை உருவானது.
இந்நிலையில் யோகி பாபு – மஞ்சு பார்கவி தம்பதிக்கு இன்று அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது.
இது குறித்து நடிகர் மனோ பாலா தனது டிவிட்டர் பக்கத்தில் , ‘நண்பன் யோகி பாபுவுக்கு ஆண் குழந்தை… மிகவும் மகிழ்ச்சி… தாயும் சேயும் நலம்’… என பதிவிட்டுள்ளார்.