இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடித்துள்ளார். மேலும் இயக்குனர் பாரதிராஜா, நந்திதா, முனீஸ்காந்த், காளி வெங்கட், பாலசரவணன், யோகி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இப்படம்,கிராமத்து பின்னணியில் காதல், ஆக்சன் , காமெடி என ஜனரஞ்சகமான படமாக உருவாகி உள்ளது.இந்நிலையில், ‘ஈஸ்வரன்’ படத்தின் சென்சார் தகவல் மற்றும் வெளியீட்டுத் தேதியை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். சிம்புவின் டுவிட்டர் பக்கத்தில் இது குறித்து வெளியிடப்பட்டுள்ள புதிய போஸ்டரில் இந்த படத்திற்கு ’யு’ சான்றிதழ் கிடைத்துள்ளது என்றும், ஜல்லிக்கட்டு காளை ஜனவரி 14-ஆம் தேதி வர்ரான்’ என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.