கடந்த 2015 ஆம் ஆண்டு விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம், ‘இன்று நேற்று நாளை’.இதில் மியா ஜார்ஜ், கருணாகரன், ஜெயப்பிரகாஷ், பகவதி பெருமாள் , ரவிசங்கர், அனுபமா குமார், ஆர்யா உட்பட பலர் நடித்திருந்தனர்.டைம் டிராவல் கதையை அடிப்படையாகக் கொண்டு வெளியான இந்தப் படத்தை ஆர்.ரவிக்குமார் இயக்கி இருந்தார்.
ஹிப்ஹாப் தமிழா இசை அமைத்திருந்தார். வசந்த் ஒளிப்பதிவு செய்திருந்தார். இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக அப்படத்தின் தயாரிப்பாளர் சிவி குமார் ஏற்கனவே கூறியிருந்த நிலையில்,தற்போது ‘இன்று நேற்று நாளை’ படத்தின் இரண்டாம் பாகம் பூஜையுடன் தொடங்கியுள்ளது.
இந்தப் படத்திற்கு இயக்குனர் ஆர்.ரவிக்குமார் கதை எழுதி உள்ளார். புதுமுக இயக்குனர் கார்த்திக் பொன்ராஜ் இயக்க உள்ளார்.முதல் பாகத்தை தயாரித்த தயாரிப்பாளர் சி.வி.குமாரின் திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இப் படத்தையும் தயாரிக்கிறது.தொடக்க விழாவில், நடிகர்கள் விஷ்ணு விஷால், கருணாகரன், தயாரிப்பாளர் சிவி குமார், இசையமைப்பாளர் ஜிப்ரான், இயக்குனர்கள் ஆர்.ரவிக்குமார், கார்த்திக் பொன்ராஜ் கலந்து கொண்டனர்.