‘திரிஷா இல்லன்னா நயன்தாரா’ பட இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் பிரபுதேவா ஹீரோவாக நடித்து வரும் பஹிரா என பெயரிடப்பட்ட படத்தை இயக்கி வருகிறார். பிரபு தேவாவுடன், அனேகன் படத்தில் நடித்த நடிகை அமிரா தஸ்தூர் மற்றும் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் புகழ் காயத்ரி உள்ளிட்டோர் முதன்மை கதாநாயகியாக நடிக்க, மேலும் 3 புதுமுக நடிகைகளும் நடித்துள்ளனர்.
மொத்தம் 5 கதாநாயகிகள் நடிக்கும் இப்படம் சைக்கோ த்ரில்லர் படமாக உருவாகி வந்தது.கடந்த செப்டம்பர் மாதம் இதன் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு பல்வேறு கட்டங்களாக நடந்து வந்த நிலையில், பஹிரா படப்பிடிப்பு தற்போது முடிவடைந்து விட்டதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.