கடந்த 2017ஆம் ஆண்டு கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடிப் பில் ’துருவ நட்சத்திரம்’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. நீண்ட காலமாக நடந்து வந்த இதன் படப்பிடிப்பு ஒருவழியாக சமீபத்தில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது. இருப்பினும் இப் படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் தேக்கம் ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டது. மேலும் இப் படத்தின் டப்பிங் பணியில் விக்ரம் கலந்து கொள்வதில் தாமதம் ஏற்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், தற்போது விக்ரம் ’பொன்னியின் செல்வன்’ படத்தின் படப்பிடிப்பை முடித்த உடன் உடனடியாக ’துருவ நட்சத்திரம்’ படத்தின் டப்பிங் பணியில் கலந்து கொள்வார் என்கிறார்கள்.
இதையடுத்து ’துருவ நட்சத்திரம்’ படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் இயக்குனர் கவுதம் மேனன் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. விக்ரமின் டப்பிங் பணி நிறைவடைந்ததும் முடிந்ததும், இப் படத்தின் வெளியீட்டுத்தேதி அறிவிக்கப்படும் என்கிறது படக்குழு.அதே போல் விக்ரமின் ’கோப்ரா’ படத்தின் படப்பிடிப்பும் இறுதிக்கட்டத்தில் உள்ளதால், ’கோப்ரா’ மற்றும் ’துருவ நட்சத்திரம்’ ஆகிய இரண்டு படங்களும் அடுத்த 2 மாதங்களில் அடுத்தடுத்து வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.