நயன்தாராவின் ‘ஸ்ட்ராபெர்ரி’ ஐஸ்கிரீம் !
By
admin on February 27, 2021
நயன்தாரா, விக்னேஷ்சிவன் இணைந்து தங்களது Rowdy Pictures பட நிறுவனத்தின் சார்பில் புதிய படங்களை தயாரித்து வருகின்றனர். “ராக்கி” மற்றும் “கூழாங்கல்” போன்ற படங்கள் உலக திரைப்பட
விழாக்களில் கலந்துகொண்டு பாராட்டுக்களை குவித்து வருகிறது. இந்நிலையில் இந்நிறுவனத்தின் மூன்றாவது படைப்பாக உருவாகும் “Walking/Talking Strawberry Ice Cream “ என்ற படத்தினை பூஜையுடன் தொடங்கியுள்ளது.
இயக்குநர் விக்னேஷ் சிவனிடம் “நானும் ரௌடி தான், தானா சேர்ந்த கூட்டம்” படங்களில் பணிபுரிந்த உதவிஇயக்குனர் வினாயக் இப்படத்தின் மூலம் இயக்குநராகிறார். இப் படம் பொழுதுபோக்கு ரொமான்ஸ் திரைப்படமாக உருவாகி வருகிறது.
சூரரை போற்று ‘கேகே’ நாயகனாக நடிக்க, ஜொனிடா காந்தி கதாநாயகியாக அறிமுகமாகிறார். இப்படத்தின் இசையமைப்பாளர் தேர்வு நடைபெற்று வருகிறது. ஒளிப்பதிவாளர் ரத்னவேலு உதவியாளர் C.H. சாய் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். கமல்நாதன் கலை இயக்கம் செய்கிறார்.