கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய சின்னத்திரை நிகழ்ச்சிக்கு பிறகு நடிகர் ஆரிக்கு படவாய்ப்புகள் வரத் தொடங்கியுள்ளது.
. கடந்த 3 மாதங்களுக்கு முன் ஆரி நடிப்பில் ‘பகவான்’ என்ற படத்தின் மிரட்டலான ப ர்ஸ்ட் லுக் போஸ்டர் சின்னத்திரை நிகழ்ச்சியில் வெளியானது .
இந்நிலையில் அந்த படத்தின் படப்பிடிப்பு,தற்போது திருவண்ணாமலை செஞ்சி கோட்டைக்கு அருகில் தொடங்கி தொடர் ந்து நடந்து வருகிறது.இது குறித்த தகவலை நடிகர் ஆரி தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். இப்படத்துக்காக நீண்ட தலைமுடியுடன் புதிய கெட்டப்பில் இருக்கும் ஆரி ரசிகர்களுடன் எடுத்து கொண்ட ‘செல்பி’யையும் பகிர்ந்துள்ளார்.