‘அசுரன்’ படத்தை தொடர்ந்து கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில், தனுஷ் நடிப்பில் அடுத்ததாக வெளியாகவுள்ள புதிய படம் கர்ணன்.இப் படத்தை மாரி செல்வராஜ் இயக்க, சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
இந்த படத்தின் முதல் 2 பாடல்களான மாரி செல்வராஜ் வரிகளில், கிடக்குழி மாரியம்மாள், சந்தோஷ் நாராயணன் ஆகியோர் பாடிய “கண்டா வரச்சொல்லுங்க” மற்றும் யுக பாரதி வரிகளில் இசையமைப்பாளர் தேவா பாடிய “பண்டாரத்தி புராணம்” ஆகிய 2 பாடல்களும் தமிழக ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று வைரலாகியது.
இந்நிலையில் கர்ணன் படத்தின் மூன்றாவது பாடல் குறித்து ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்த நிலையில், மூன்றாம் பாடலான ” திரெளபதியின் முத்தம்” எனத் தொடங்கும் பாடலை கர்ணன் படக்குழு நாளை வெளியிடவுள்ளதாக அறிவித்துள்ளது.