இப்படம் குறித்து இயக்குனர் டி.எம்.ஜெயமுருகன் கூறியதாவது, “இன்றைய நவீன காலத்தில் நம் கிராமத்து பண்பாடும், நாகரீகமும், உறவுகளும் மறைந்து வருகிறது.அண்ணன், தங்கை பாசத்தை சொல்ல நிறைய படங்கள் வந்திருந்தபோதும் இதில் ரத்தமும், சதையுமான அந்த உறவை சொல்கிறோம். உயிரை விட மானம் பெரிது என்பதுதான தமிழர்களின் உச்சபட்ட நாகரீகம் அதை உணர்த்தும் படமாக இது இருக்கும்.படப்பிடிப்பு 70 சதவீதம் முடிவடைந்துள்ளது. இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது.
இந்த படத்தில் நவரச நாயகன் கார்த்திக் ஹார்லி டேவிட்சன் பைக்கில் டூப் போடாமல் பல சண்டைக் காட்சிகளில் பல சாகசங்களை செய்துள்ளார். இன்றைக்கு நடிக்க வரும் இளம் நடிகர்களே இந்த காட்சிகளை நடிக்க தயங்குவார்கள் அப்படியான காட்சிகளில் நடித்து அசத்தியுள்ளார். அது மட்டுமல்லாது ஹம்மர் என்ற விலையுர்ந்த கார் ஒன்றை வைத்து பாடல் காட்சி ஒன்றை ஹாலிவுட் தரத்தில் எடுத்துள்ளோம். இந்த படம் வெளியான பிறகு நடிகர் கார்த்திக் மீண்டும் பல படங்களில் நாயகனாக நிச்சயம் நடிப்பார் என்கிறார் .