மூச்சுத் திணறல்: நடிகர் கார்த்திக் மருத்துவமனையில் அனுமதி!

மனித உரிமை காக்கும் கட்சியின் நிறுவனரும், நடிகருமான எம் கார்த்திக் வரும் சட்டமன்ற தேர்தலில் பிஜேபி, அண்ணா திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்ள இருந்தார்.இந்நிலையில், நேற்று இரவு அதற்கான தேர்தல் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது திடீரென அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது.

உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை ஆம்புலன்ஸ் மூலம் சென்னை அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.அங்கு அவருக்கு பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதற்கிடையே அவருக்கு நடத்தப்பட்ட கொரோனா தொற்று பரிசோதனையில் அவருக்கு நெகட்டிவ் என்றும் கொரோனா தொற்று எதுவும் இல்லை என வந்துள்ளதாக கூறப்படுகிறது இதையடுத்து நடிகர் கார்த்திக் மருத்துவர்களின் தீவிர தொடர் கண்காணிப்பில் இருந்து வருகிறார். இது திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.