காஞ்சனா-3 கதாநாயகிக்கு கொரோனா!

ராகவா லாரன்ஸ் நடித்து இயக்கிய ’காஞ்சனா 3’ திரைப்படத்தில்வேதிகா, ஓவியா மற்றும் நிக்கி தம்போலி ஆகிய மூவரும் கதாநாயகிகளாக நடித்து இருந்தனர். இந் நிலையில் அந்த கதகதாநாயகி நடிகைகளில் ஒருவரான நிக்கி தம்போலிக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து நடிகை நிக்கி தம்போலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்  கூறியுள்ளதாவது,, ‘எனக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது என்பது இன்று காலை தெரியவந்தது.

இதனை அடுத்து நான் தனிமைப்படுத்திக்கொண்டேன். மேலும் என்னுடன் தொடர்பில் இருந்த அனைவரும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். மருத்துவரின் ஆலோசனைப்படி தற்போது நான் சிகிச்சை பெற்று வருகிறேன். விரைவில் குணமாகிவிடும் என்று எதிர்பார்க்கிறேன்.அனைவரும் பாதுகாப்பாக இருங்க. மாஸ்க் அணிந்து வெளியே செல்லுங்கள். அடிக்கடி சானிடைசர் பயன்படுத்துங்கள் என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.