கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில், கமல் ஹாசன் நடிப்பில் கடந்த 2001 ம் ஆண்டு வெளியான பிரம்மாண்ட சைக்கலாஜிக்கல் த்ரில்லர் திரைப்படம் ஆளவந்தான்.சுரேஷ் கிருஷ்ணா இயக்கி இருந்தார். இப்படம் தற்போது 20 ஆண்டுகளுக்கு பிறகு ரீ ரிலீஸ் செய்யப்பட உள்ளது.இந்த படத்திற்கு கமல்ஹாசன் திரைக்கதை எழுதியதுடன், ராணுவ அதிகாரியாகவும், முரட்டுத்தனமான சைக்கோ வில்லன் என மிரட்டலான இரண்டு வேடங்களில் நடித்திருந்தார்.
ரவீனா டாண்டன் கதாநாயகியாக நடித்திருந்தார் இப் படத்தில் கடந்த 20 வருடங்களுக்கு முன்பே கிராபிக்ஸ் காட்சிகள் அற்புதமாக இருந்தன என்பதும் கிராபிக்ஸ் காட்சிகளுக்காக இந்த படம் தேசிய விருது பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆனால் அதே நேரத்தில் இந்த படம் வெளியான போது வசூல் ரீதியாக வெற்றி பெறவில்லை என்பதும் தயாரிப்பாளர் தாணுவுக்கு இந்த படத்தால் ஏகப்பட்ட நஷ்டம் என்றும் கூறப்பட்டது. இந்நிலையில் இந்த படத்தில் ஒரு சில மாற்றங்களை செய்து மீண்டும் புதிய பொலிவுடன் வெளியிட படத் தயாரிப்பாளர் தாணு முடிவு செய்து இருப்பதாகவும், இம் முறை கண்டிப்பாக இந்த படம் மிகச்சிறந்த அளவில் வெற்றிபெறும் என்றும் கூறப்படுகிறது.