தென்னிந்திய நடிகைகளில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக வலம் வரும் நயன்தாரா, சிம்பு,பிரபு தேவா ஆகியோருடனான காதல் முறிவுக்கு பின் இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார்.இருவரும் ‘லிவிங் டூ கெதரில் பாணியில் வாழ்ந்து வருகின்றனர். இவர்களது திருமணம் ரகசியமாக நடந்து முடிந்து விட்டதாக நெட்டிசன்கள் பலரும் கூறி வரும் நிலையில், இருவரும் அது குறித்து வாய் திறப்பதில்லை.இருவரும் அடிக்கடி வெளிநாடுகளுக்கு அடிக்கடி ஜாலி டூர் செல்வதை வழக்கமாக வைத்துள்ள நிலையில் அப்புகைப்படங்களை தங்களது சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதையும் வழக்கமாக கொண்டுள்ளனர். அப் புகைப்படங்களும் இணைய தலை ரசிகர்களால் வைரலாவது வழக்கம்.போட்டோக்கள் வெளியாகி வைரலாவது வழக்கம்.
கொரோனா லாக்டவுன் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், இருவரும் தனி விமானம் மூலம் கோவா சென்றனர்.தொடர்ந்து ஓணம் பண்டிகையை கொண்டாடவும் ‘தனி விமானத்தில்’ இருவரும் கேரளா சென்றனர்.இப்புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி, நடிகைகள் பலரையும் பெருமூச்சு விட செய்தது.
இந்நிலையில், கேரளாவில் வரும் ஏப்ரல் 14ஆம் தேதி மலையாள புத்தாண்டான விஷு பண்டிகை கொண்டாடப்படுகிறது. இப்பண்டிகையை கேரளாவில் உள்ள தனது வீட்டில் பெற்றோர்களுடன் கொண்டாட நயன்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் மீண்டும் தனி விமானத்தில் கொச்சி சென்றுள்ளார்.விக்னேஷ் சிவன்.
,விமானத்திற்குள் அமர்ந்திருக்கும் நயன்தாராவை பல கோணங்களில் போட்டோவும் வீடியோவும் எடுத்து தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படங்களும் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அடிக்கடி நயன்தாரா இப்படி புகைப்படங்களும், வீடியோக்களும் வெளியிடுவது முன்னாள் காதலர்களை வெறுப்பேற்றவா என நெட்டிசன்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.