ஏ.எல்.விஜய் இயக்கத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் மற்றும் நடிகையான ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு தலைவி எனும் பெயரில் திரைப்படமாக உருவாகி உள்ளது. இப்படத்தில் நடிகை கங்கனா ரனாவத் ஜெயலலிதாவாகவும் அரவிந்த்சாமி எம்ஜிஆராகவும் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.ஜெயலலிதாவின் சினிமா வாழ்க்கை முதல் அரசியல் வாழ்க்கையிலான காட்சிகள் இப்படத்தில் காட்டப்பட்டுளாது. படத்தின் நாயகி கங்கனா ரணவத் பிறந்தநாளை முன்னிட்டு கடந்த மாதம் தமிழ் மற்றும் இந்தி மொழியில் இப் படத்தின் ட்ரைலர் வெளியானது. சில சர்ச்சைக்குரிய காட்சிகள் இந்தி ட்ரைலரில் மட்டும் இடம்பெற்றிருந்தது இணையத்தில் வைரலானது.கடந்த வருடம் ஜூன் இறுதியில் இப் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்த நிலையில், லாக்டவுன் காரணமாக இப்பட வெளியீட்டு தள்ளிப்போனது.தற்போது கொரோனா இரண்டாம் அலை தொடர்ந்து வேகமாக பரவி வருவதால் திரையரங்குகளில் 50 % இருக்கைகள் மட்டுமே அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இதனால் படக்குழு படத்தை மீண்டும் தள்ளிப்போடுவதாக அறிவித்துள்ளது.