பரியேறும் பெருமாள்’படத்தை தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கியுள்ள படம் ‘கர்ணன்’. நடிகர் தனுஷ், நட்டி, லால், நடிகை ரஜிஷா விஜயன், கவுரி கிஷன் உள்ளிட்ட பல்வேறு நடிகர்கள் நடித்துள்ள இத்திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். கலைப்புலி எஸ்.தாணு இப்பட த்தை தயாரித்துள்ளார்.
இப்படம் கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படம், ரசிகர்கள் மத்தியிலும், விமர்சனம் ரீதியாகவும் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.கொரோனா கட்டுப்பாடுகளுக்கு மத்தியிலும் இப்படம் வெளியான ஒரே நாளில் ரூ.24 கோடி வசூலித்து கர்ணன் திரைப்படம் சாதனை படைத்துள்ளதாகவும் .தமிழ்நாட்டில் மட்டும் முதல் நாள் வசூலாக 10.5 கோடி முதல் 11.5 கோடி வரை வசூல் குவிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்நிலையில் இயக்குனர் மாரி செல்வராஜ், தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், கர்ணன் திரைப்படத்தை வெற்றி பெற வைத்த ரசிகர்களுக்கு நன்றி என கூறியுள்ளார்.
மேலும் இப்படத்தின் நாயகி ரஜிஷா விஜயன் ரசிகர்களுக்கும், இயக்குனர் மாரிசெல்வராஜுக்கும் நன்ரி தெரிவிக்கும் விதமாக தனது டுவிட்டர் பக்கத்தில்,’கர்ணன் திரைப்படத்துக்கு மிகப்பெரிய வரவேற்பு அளித்து வரும் உங்களின் மிகப்பெரிய அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி. எனது இயக்குநருக்கு ஒரு பெரிய நன்றி.ரசிகர்களே,கர்ணனை தியேட்டர்களில் மட்டுமே பாருங்கள். என்றும் குறிப்பிட்டுள்ளார் இந்நிலையில் திரையரங்கு உரிமையாளர்களும், விநியோகஸ்தர்களும் பட அதிபர் தாணுவை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்து வருகின்றனர்.